’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா"-சமந்தாவின் ரிகர்சல் வீடியோ...

சமந்தா வெளியிட்ட ரிகர்சல் வீடியோ...

’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா"-சமந்தாவின் ரிகர்சல் வீடியோ...

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த  ’புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என  பான் இந்தியா மொழிகளில் வெளியாகிய புஷ்பா திரைப்படம்  பிளாக் பஸ்டர்  வெற்றி பெற்றதோடு, மிகப்பெரிய  வசூலையும் வாரி குவித்தது.  

புஷ்பா படத்தின் வெற்றியில் இந்த படத்தில் இடம்பெற்ற   ’ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா’ என்ற பாடல் மிக முக்கிய பங்கு வகித்தது. சமந்தா நடனம் ஆடிய இந்த பாடலுக்கு  ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பட்டிதொட்டி எங்கும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் குறித்து பேசிய நடிகை சமந்தா  ’ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு மிகப் பெரிய கடின உழைப்பு தேவைப்பட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பாடல் படமாக்கப்படும் முன் ரிகர்சல் செய்யப்பட்ட போது எடுத்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.  

அந்த வீடியோவை பார்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமந்தாவின் நடனத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.  இந்த வீடியோ தற்போது தீயாய் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.