ராதே ஷ்யாம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!!

பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் காதலை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் ராதே ஷ்யாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டு தேதியை ஒத்திவைத்தது படக்குழு. தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது....