வெளியானது அண்ணாத்த படத்தின் 2 -வது பாடல்..... ‘

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் 2ஆம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளியானது அண்ணாத்த படத்தின் 2 -வது பாடல்..... ‘

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் வரும் தீபாவளியையொட்டி நவம்பர் 4 ஆம் திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பி பாடிய முதல் பாடல் கடந்த வரம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது.