வெளியானது வலிமை Update! பெருமைகொள்ளும் வானதி சீனிவாசன்

நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.

வெளியானது வலிமை Update! பெருமைகொள்ளும் வானதி சீனிவாசன்

நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் பல நாட்களாக வெளிவராத நிலையில், ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தொடங்கி பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு தொல்லைக்கொடுத்தனர். இதனிடையே கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவானால் நிச்சயம் வலிமை அப்டேட் வாங்கி கொடுப்பதாக தேர்தலுக்கு முன்னர் வானதி சீனிவாசன் வாக்குறுத்தி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 

அதில், “வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் வலிமை திரைக்கு வரும்” என்ற அப்டேட்டை படக்குழுவினர் ரசிகர்களுக்கு வழங்கியது.  

வலிமை திரைப்படத்தின் Motion Poste வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது.

சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் வலிமை அப்டேட் கிடைக்கும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருந்த நிலையில், “நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.