ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் ”சாகுந்தலம்”...

ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் ”சாகுந்தலம்”...

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குணசேகர் இயக்கத்தில், சமந்தா தேவ் மேனன், அதிதிபாலன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம். நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகு பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

மேலும் படிக்க | 30 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'வாத்தி' டிரைலர்...