'சந்திரயான்-3' -ன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாணவர்களின் மணல் சிற்பம் ...!

'சந்திரயான்-3' -ன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாணவர்களின்  மணல் சிற்பம் ...!

சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் மணல் சிற்பம் உருவாக்கி உள்ளனர். 

இந்திய வரலாற்றில் முக்கிய சாதனையாக சந்திராயன்-3  நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக கால் பதித்ததை வரவேற்கும் விதமாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாகவும், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள பாரதியார் அரசு பல்கலைக் கூட சிற்பத்துறை மாணவர்கள் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

மாணவர்கள் ஆகாஷ்குமார், சார்லி, ஹேமாவதி, சத்யா, ஸ்ரீலேகா, சுப்பிரமணி, யோகேஷ், ஜனோ பெரனான்டஸ் ஆகியார் 12 அடி பரப்பளவும், 6 அடி உயரமும் கொண்ட சந்திரயான் 3 மணற்சிற்பம் செய்து தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க   | "தமிழ்நாட்டில் 10 கோடி மக்களுக்கு சர்க்கரை நோய்" வெளியான அதிர்ச்சி தகவல்!