பூமிக்கு மிக அருகே வருது சனிக்கிரகம்: இன்று தெரியும் அரிய நிகழ்வு!  

பூமிக்கு மிக அருகே சனிக்கிரகம் நெருங்கிய அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது.

பூமிக்கு மிக அருகே வருது சனிக்கிரகம்: இன்று  தெரியும் அரிய நிகழ்வு!   

பூமிக்கு மிக அருகே சனிக்கிரகம் நெருங்கிய அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது.

சூரியனை சுற்றிலும் குறிப்பிட்ட இடைவெளியுடன் நீள்வட்ட பாதையில் பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றுள் மிகப்பெரிய வளையத்துடன், இரவில் நட்சத்திரம் போல் மின்னும் சனிகிரகம், ஆண்டுக்கு ஒரு முறை பூமியை நேர்கோட்டில் மிக நெருக்கமாக சந்திக்கிறது. அந்தவகையில் ஒரு வருடம் 13 நாட்களுக்கு பின் இன்று காலை 11. 30 மணியளவில், அந்த அரிய நிகழ்வு காணப்பட்டுள்ளது.  இந்த அரிய நிகழ்வு பகல் நேரத்தில் நிகழ்ந்ததால், பலரும் தொலைநோக்கி வழியாக கண்டுகளித்தனர்.

இரு கிரகங்களும் சந்தித்துக்கொண்ட இடைபட்ட தூரம் கிட்டதட்ட 120 கோடி கிலோ மீட்டராக இருந்தது என்றும், இதோபோன்ற நிகழ்வு அடுத்தாண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.