காதலனை வச்ச கண்ணு வாங்கமா பார்க்கும் நயன்...ஒரே லவ்ஸ்தான்னு கலாய்க்கும் நெட்டிசன்கள்...

காதலி நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் இயக்குனர்  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஸ்பெஷல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலனை வச்ச கண்ணு வாங்கமா பார்க்கும் நயன்...ஒரே லவ்ஸ்தான்னு கலாய்க்கும் நெட்டிசன்கள்...

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா தனது காதலனும், இயக்குனரும் ஆன விக்னேஷ் சிவனுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர். சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று  உலகம் முழுவதும் கொண்டாடிவந்த நிலையில், ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படம் எங்கப்பா என கேட்டு வந்த ரசிகர்களுக்காக தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

அந்த புகைப்படத்தில்  விக்னேஷ் சிவன் கேஷுவலாக எங்கோ பார்ப்பது போல நிற்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது வருங்கால கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை வச்சக் கண்ணு வாங்காமல் அப்படியொரு லுக் விட்டு பார்க்கும் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளி வருகிறது. 

மேலும், இந்த நாளும் வரும் 2022ம் ஆண்டும் அனைவருக்கும் லவ்லியாக இருக்க வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

அந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்,  சுமார் 6 கிறிஸ்துமஸ் வரை காதலர்களாக சேர்ந்து கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எப்போது தான் கணவன் மனைவியாக கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகளை சேர்ந்து கொண்டாட போறாங்க என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.