சமந்தாவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...! என்ன தெரியுமா..?

நடிகை சமந்தாவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் குறித்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தாவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்  கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...! என்ன தெரியுமா..?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கதிஜாவிற்கு கண்மணி ஒரு சிறப்பு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நெருக்கம் ஆகி விட்ட நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தோழி சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து அட்டை மற்றும் காதணியை கிஃப்ட்டாக வழங்கி உள்ளார்.

அவர் அளித்த வாழ்த்து அட்டையில் சமந்தாவின் கேரக்டரான கதிஜாவை குறிப்பிட்டு 'டியர் கதிஜா, வித் லவ் கண்மணி’ என தனது வாழ்த்துக்களை நயன்தாரா தெரிவித்துள்ளார். இதற்கு சமந்தாவும் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், இதுகுறித்த புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் ”நன்றி டார்லிங் நயன்” என்று பதிவிட்டுளார். அந்த பதிவு தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.