பிரபல நடிகருக்காக கூட்டு சேர்ந்த சூர்யா - கார்த்தி..!!

நடிகர் அருண் விஜய்யின் ’பார்டர்’ படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரபல நடிகருக்காக கூட்டு சேர்ந்த சூர்யா - கார்த்தி..!!

‘குற்றம் 23’ படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் அறிவழகன்.இந்த படத்தை அடுத்து நடிகர் அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அருண் விஜய்

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர்களை வைத்து வெளியிட்டனர். நடிகர்  சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அருண் விஜய்யின் ’பார்டர்’ டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

’பார்டர்’ ரசிகர்களை பெரும் வகையில் கவர்ந்து  இணையத்தை கலக்கி வருவதோடு மட்டுமில்லாமல், டியூடியூப்பிலும் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.