13 வருடம் கழித்து அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்

13 வருடம் கழித்து அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்

அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நவ்தீப். அதன் பின்னர் நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ, இது என்ன மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். 

ஆனால் இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஏகன் படத்தில் நவ்தீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் தல அஜித்தை நவ்தீப் சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.