பிரபல பாலிவுட் நடிகர் திலிப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்...

பழம் பெறும் பாலிவுட் நடிகர் திலிப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் இருக்கும் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். 

பிரபல பாலிவுட் நடிகர் திலிப் குமார்  உடல்நலக்குறைவால் காலமானார்...

ஜ்வார் பாட்டா என்ற இந்தி படத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் திலிப் குமார். பாலிவுட்டில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்துக் கொண்டவர். மேரே சப்பு நோக்கி ராணி துஜே ஆயா கீது என்ற பாடல் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பரபலம். 


சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் திலிப் குமார். அதன் பின் 8 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.1992 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. காதலாகட்டும், முரட்டுத்தனமான பாத்திரமாகட்டும் எந்த கதாபத்திரத்தை ஏற்றாலும் அதில் தனது முத்திரையை பதிக்காமல் விடமாட்டார். 

ஜூக்னூ, கபூருடன் இணைந்து காதல் இசை நாடகமான அண்டாஸ், தேவ் ஆனந்த் உடன் இன்சநியாட் போன்ற திரைப்படங்கள் திலிப் குமரரை ரசிகர்களிடையே சேர்ந்த பல படங்களில் மிகவும் முக்கியமானவை. 

திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது இந்திய அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவித்தது.1980 ஆம் ஆண்டு மும்பையின் ஷெரிப்பாகவும் திலிப் குமார் நியமிக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டு அவருக்கு என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது, 2009ல் சிஎன்என்-ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன்-வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரையுலகில் திலிப் குமார் ஒரு சகாப்தம் என்றெ சொல்ல வேண்டும். 

இந்த நிலையில் தனது 98 -வது வயதில் நம்மிடையே விடைபெற்று விண்ணுலகை ஆள சென்று விட்டார் திலிப் குமார். திலீப் குமார் மறைந்தாலும் அவரின் படங்கள் மூலம் நிலைத்து இருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் திலீப் குமார் நடித்த படங்களின் வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.