மீண்டும் கதாநாயகனாக களமிறக்கும் நகைச்சுவை நடிகர்..! டிடெக்டிவ் கெட்டப்பில் கலக்கல் ஸ்டில் வைரல்..!

டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்திருக்கும் யோகிபாபு..!

மீண்டும் கதாநாயகனாக களமிறக்கும் நகைச்சுவை நடிகர்..! டிடெக்டிவ் கெட்டப்பில் கலக்கல் ஸ்டில் வைரல்..!

பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நகைச்சுவை தொடரில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் யோகி பாபு. அதன் பிறகு பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம் என பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடத்து வந்தார். 

தொடர்ந்து மான்கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமேன், ஆண்டவன் கட்டளை என அடுத்தடுத்து தனது நடிப்பால், மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யோகி பாபு. அதன் பின் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை பிக் அப் செய்ய அவர் செய்த அட்ராசிட்டி ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கியது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இவர் அடித்த லூட்டி ரசிக்கும் படியாக இருந்தது. காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தவர், கோமாளி படம் மூலம் தன்னை ஒரு குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்தார்.

அதன் பின் கூர்கா, தர்மபிரபு படங்கள் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த யோகி பாபு, மண்டேலா படத்தில் ஒரு ஹீரோவாகவே கண கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஹீரோவாக நடித்தாலும் கூட, அடுத்தடுத்து குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவரது கைவசம் விஜய்யின் பீஸ்ட், ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, அரண்மனை 3, சைத்தான்கே பட்சா, சதுரங்க வேட்டை 2, டாக்டர், அயலான், சுந்தரா டிராவல்ஸ்-2, காசேதான் கடவுளடா என டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார் யோகிபாபு. 

இந்த நிலையில், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள வீரப்பனின் கஜானா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜோதிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ராட்சசி படத்தை இயக்கிய கௌதம்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், யோகி பாபுவுடன், மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், தயாரிப்பாளர் தாணுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதில், கூலிங் கிளாசுடனும், நீண்ட கோட்டுடனும் பார்ப்பதற்கு ஒரு டிடெக்டிவ் போலவே யோகி பாபு காட்சியளிக்கிறார்.