சமந்தாவின் மஞ்சள் நிற ஜாக்கெட்டின் விலை இவ்வளவா...? விலையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

சமந்தாவின் மஞ்சள் நிற ஜாக்கெட்டின் விலை இவ்வளவா...? விலையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒன்றாக நடிகை சமந்தா பனிசறுக்கில் ஸ்கேட்டிங்  பயிற்சி செய்வதுபோன்று வீடியோ இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் அந்தப் பயிற்சி வீடியோவில்  அவர் அணிந்திருந்த ஸ்னோ ஜாக்கெட் ரசிகர்களை ஈர்த்து வந்ததால் அதன் விலையைக் குறித்து ரசிகர்கள் இணையத்தையே அலசி வந்தனர். அப்போது அந்த மஞ்சள் நிற ஸ்னோ ஸ்போர்ட் ஜாக்கெட் Moncler எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும், அதன் விலை ரூ.1,22,212 என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் நடிகை சமந்தா பயன்படுத்திய மற்றொரு மஞ்சள் நிற ஜாக்கெட்டின் விலை ரூ.75,000 என்பதையும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்ததால் பலருக்கும் இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.