இன்று மாலை 7 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க... KRK-வின் டிரைலர் ரிலீஸ்!!

இன்று மாலை 7 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க... KRK-வின் டிரைலர் ரிலீஸ்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்படி இப்படத்தில் இருந்து ஏற்கனவே 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் படத்தின் டிரைலருக்காக காத்திருக்கின்றனர்.