’24 கொலை செய்துள்ளேன்; உன்னையும் சேர்த்து 25 கொலை’ - வெளியானது ”சாணிக்காயிதம்” டிரைலர்!!

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்திருக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ட்ரைலர் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

’24 கொலை செய்துள்ளேன்; உன்னையும் சேர்த்து 25 கொலை’ - வெளியானது ”சாணிக்காயிதம்” டிரைலர்!!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்  உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘சாணிக்காயிதம்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். 

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சற்றுமுன்னர் இப்படத்தின் ட்ரைலர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. 

சரியா 3 நிமிடத்திற்கு மேலாக உள்ள இந்த ட்ரைலரில் முழுவதும் பழிவாங்கும் உணர்வோடு செயல்படும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் வெறித்தனமான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. இந்த ட்ரைலரின் முதலில் செல்வராகவன் தான் 24 கொலை செய்ததாக கூறுவதுடன் கூடிய சண்டை காட்சிகள் அடங்கியுள்ளது.

இரண்டாவதாக கீர்த்தி சுரேஷ் தான் 25 கொலை செய்ததாக கூறுகிறார். உடனே, எங்கேயோ இடிக்கிறதே என கேட்டவரை பார்த்து, உன்னையும் சேர்த்து 25 கொலை என கீர்த்தி சுரேஷ் கூறுவதுடன் கூடிய சண்டை காட்சிகளுடன் இந்த ட்ரெய்லர் முடிகிறது. சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர், பார்ப்பவர்களை கவனத்தை ஈர்த்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.