விஜய்யின் 'லியோ' படத்தின் டிக்கெட் முன்பதிவு ...?

விஜய்யின்    'லியோ' படத்தின்  டிக்கெட் முன்பதிவு  ...?

‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 6 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார்.

Thalapathy Vijay Leo Movie Latest Update Lokesh Kanagaraj | விஜய் நடிக்கும்  லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்கள் உற்சாகம் | Movies News in Tamil

இந்த படம் அக்டோபர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லண்டனில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 7-ந்தேதியில் இருந்து தொடங்கும் என பட வெளியீட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கைதி, விக்ரம் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகரான விஜய் நடித்திருப்பதாலும், தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தொடர்ச்சியை வைத்து அடுத்த படத்தில் அதனை இணைத்து வித்தியாசமான யுக்தியோடு இயக்கும் இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வாறிருக்க இந்த லியோ படத்தை அனைவரும் ஆர்வாமாக எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த  வேளையில், லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்...வாழ்த்து தெரிவித்த தமிழிசை!