லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாளா !!! "எனக்கு என்டே கிடையாது" என அடுத்து அடுத்து கலக்கும் நயன்...

லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாளா !!! "எனக்கு என்டே கிடையாது" என அடுத்து அடுத்து கலக்கும் நயன்...

தமிழ் திரை உலகில் தனக்கென தனி மகுடத்தை சூடி ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விற்கு இன்று பிறந்த நாள்.அவரது ரசிகர்கள் மற்றும் பிரபல திரை உலகினர் அவருக்கு பிறந்து நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன் :

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தன் கரியர ஸ்டார்ட் பண்ணி இப்போ யாரும் தொட முடியாத உச்சிக்கு போயிருக்காங்க நம்ம நயன். தமிழில் அவர் நடித்த திரைப்படமான ஐயா அவருக்கு கோலிவுட்டில் என்ட்ரி குடுத்த படம்.அடுத்து அவர் நடித்த இரண்டாவது படமான சந்திரமுகி அவரோட கரியர எங்கயோ கொண்டு போயிருச்சு.இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியா நயன் நடிச்சிருப்பாங்க.அப்பாவியான கேரக்ட்டர் ல் நடித்து இப்பொது தமிழ் திரை உலகிற்கு மாஸ் காட்டிட்டு வராங்க.இன்று அவங்க தனது 38 வது பிறந்த நாள் கொண்டாடறங்க. அவரோட ரசிகர்கள் அவங்களுக்கு வாழ்த்து மழையை கொட்ரங்க.

சமீபத்தில் நயனுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இரட்டை குழந்தைகளைக்கு பெற்றோர் ஆனதை ட்வீட்  செய்து இருந்தனர்.இது மக்களிடையே காட்டு தீ போல் பரவி வைரல் ஆனது .நயன்தாரா நடிக்க வந்த நாள் முதலிருந்தே பல சர்ச்சைகைளயும்,கிசு கிசுக்களையும் சந்தித்து வந்தார்.இதை எல்லாம் அவர் பொருட்படுத்தாமல் தனது  நடிப்பால் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார்.

பிறந்த நாள் பரிசாக அடுத்த படத்தின் டீஸர்  :

இன்று பிறந்த நாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் "கனெக்ட்" திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.அவரது ரசிகர்கள்  டீசரை காண எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ரசிகர்கள் பிறந்த நாள்  வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் டீசரை பார்க்கவும் ஆவலோடு காத்திருக்கின்றனர் .திரை பிரபலபங்களும் நயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . "கன்னெக்ட்" படத்தின் படக்குழு இப்படத்தின்   டீசரை இன்று வெளியிட்டு நயன்தாராவுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளது என்றே கூறலாம்.