திரைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன, ஆதிபுருஷ்-க்கு பொதுநல வழக்கு!

திரைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன, ஆதிபுருஷ்-க்கு பொதுநல வழக்கு!

டெல்லி: பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று (16ம் தேதி), இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் "ஆதிபுருஷ்" திரைப்படம் வெளியாகியுள்ளது.  தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது.

முழுவதும் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தது. திரைக்கு வரும் முன், இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ஆதி புருஷ் வெளியிடப்பட்டதும், திரையரங்குகளில், கடவுள் ஆஞ்சிநேயருக்கு ஒரு இருக்கை காலியாக இடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இணைய வாசிகள் பலரும் கேலி செய்த வண்ணம் இருந்தனர்.

இத்தனை ஆர்ப்பரிப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் நேற்று திரையில் இறங்கிய ஆதிபுருஷ் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், மாறாக அவர்களை சலிப்படைய செய்துள்ளது. திரைப்படத்தை பார்த்துவிட்டு, அதன் எதிர்மறை கருத்துகளை தெரிவிக்கும் சினிமா ரசிகர்களை, நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த திரைப்படத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாவும் அதனை நீக்கக் கோரியும் இந்துசேனா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமர், ராமாயணம் மற்றும் இந்து கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ, திரைக்கு வந்த பின்பு, ரதிர்ப்புகளை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இன்னைக்கு ஒரு புடி; எல்லாரும் வாங்க!