வெளியானது வாடிவாசல் டீசர்; சூரியாவுக்கான அடுத்த பிறந்தநாள் பரிசு

சூரியாவின் பிறாந்தநாளை முன்னிட்டு, கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

வெளியானது வாடிவாசல் டீசர்; சூரியாவுக்கான அடுத்த பிறந்தநாள் பரிசு

வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான இந்த படம், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்குப் பேர் போன வாடிவாசல் பகுதியையே, படத்திர்கு தலைப்பாக வைக்கப்பட்ட நிலையில், படம், முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை மையமாக வைத்துத் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: ‘வாடிவாசல்’ திறக்க நானும் காத்திருக்கிறேன் - படப்பிடிப்பின் புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ந்த சூரி!!

இந்த படத்தில் சூர்யா தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி ஏற்கனவே பலரது ஆர்வத்தைத் தூண்டியுள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது எனஒப் படக்குழு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டிஜிட்டல் ரிலீஸ்க்கு ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யாவின் படம்...?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சூரியாவிற்கு பல வகையான பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வரும் நிலையில், 2020ம் ஆண்டு அவர் நடித்த சூரரைப் போற்று படத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. அதில், சிறந்த நடிகருக்கான விருதுப் பெற்ற சூரியாவிற்கு, சிறந்த தயாரிப்பு நிறுவனம் என அவரது 2 டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கிடைத்தது தான் பெரும் பரிசு என அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில், மேலும் அவரது இந்த சிறப்புத் தினத்தை மேம்படுத்தும் வகையில், கலைப்புலி எஸ் தாணு, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். “Not A Teaser” என்ற தலைப்பில், ஒரு டீசரை, அதாவது ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படு மாசாக இருக்கும் இந்த டீசர், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.