61 வயது நடிகருடன் ஜோடி போடும் வரலட்சுமி.. வைரல் போஸ்டர்

61 வயது நடிகருடன் ஜோடி போடும் வரலட்சுமி.. வைரல் போஸ்டர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் வெளியான அகண்டா திரைப்படம் வசூல் ரீதியாக வாரி குவித்தது. அந்த அளவிற்கு இப்படத்தின் வெற்றியை பல பிரபலங்கள் கொண்டாடினர்.

இப்படத்திற்கு பிறகு பாலகிருஷ்ண அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது என்பிகே 107 என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரலட்சுமிக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இரண்டாவது ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.