வாரிசு படத்தின் கலை இயக்குனர் மறைவு...! சோகத்தில் திரைத்துறையினர்...!

வாரிசு படத்தின் கலை இயக்குனர் மறைவு...! சோகத்தில் திரைத்துறையினர்...!

வாரிசு படத்தின் கலை இயக்குனர் சுனில் பாபு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.

இந்திய சினிமாவின் முக்கிய கலை இயக்குநரான சுனில் பாபு, கேரள மாநிலம் பத்தனம் திட்டா, மல்லப்பள்ளியை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர், பிரபல கலை இயக்குனரான சாபு சிரிலிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினார். இவர் கஜினி, துப்பாக்கி, தோனி, சீதா ராமம், உறுமி, பிரேமம், பெங்களூர் டேஸ் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியாக நடிகர் விஜயின் வாரிசு படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  

இந்நிலையில், அவர் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் துல்கர் சல்மான் அவரது சமூக வலைதலத்தில், “ மிகவும் ஆர்வத்துடன் அமைதியாக தனது வேலையைச் செய்கூடியவர். எங்கள் படங்களுக்கு உயிர் கொடுத்தீர்கள். இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடிவில்லை. உங்கள் குடும்பத்தினருக்காகவும், உங்களை மிகவும் நேசித்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ” என பதிவிட்டுள்ளார்.