மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கட்டி பிடித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!! வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ்சிவன்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கட்டி பிடித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் துணை நடிகராக  தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது மாஸ் நடிகராக முன்னேறியுள்ளார். 

தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சீனுராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ’பீட்சா’ ’சூது கவ்வும்’ ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்து சினி துறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் சரி, ஹீரோ, வில்லன், வயதான கேரக்டர், சிறப்பு தோற்றம் என எந்த கேரக்டரிலும் நடிக்கும் அளவுக்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டார். இதனைத்தொடர்ந்து ’விக்ரம் வேதா’ என்ற மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் அவருடைய மார்க்கெட் தமிழ்த்திரையுலகில் உச்சத்திற்கு சென்றது எனலாம். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது தேசிய நடிகராகி உள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஜய்சேதுபதிக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கு புகைப்படத்துடன்  வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அதில் மக்கள் செல்வன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! நீங்கள் மிகவும் இனிமையான, சிறந்த, நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த நடிகர்!

நான் எடுக்கும் ஒவ்வொரு பட ஷாட்டிலும் நீங்கள் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள்! உங்களைக் கவர சிறப்பாக எழுதுகிறேன்! உங்கள் திறமை என்னை ஊக்குவிக்கிறது! திரையிலும் சரி வெளியேயும் சரி உங்களுடன் சுற்றித் திரிந்து இன்னும் அற்புதமான தருணங்களை உருவாக்க விரும்புகிறேன். உங்கள் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது! என் ஹீரோவே... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.