என்னது யாஷிகாவுக்கு கல்யாணமா?.. அரேஞ்சு மேரேஜா?.. லவ் மேரேஜா?.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட திருமண அறிவிப்பை கண்ட ரசிகர்கள் வாய்அடைத்து போய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

என்னது யாஷிகாவுக்கு கல்யாணமா?.. அரேஞ்சு மேரேஜா?.. லவ் மேரேஜா?.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இந்த படத்தையடுத்து கழுகு, நோட்டா, உத்தமன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா, மோசமான கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.

எப்போது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருவார்.

 இந்நிலையில்,  யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற செய்தியை கூறுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இதுதான் செட்டில் ஆவதற்கு சரியான நேரம்.

ஆனால் அதே நேரத்தில் எனக்கு சினிமா பிடிக்கும் என்பதால் தொடர்ந்து சினிமாவில் நடித்து உங்களை மகிழ்விப்பேன். நமக்கு லவ் செட் ஆகல. எனவே இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சியகப்படுகிறது. உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். Arrange Marriage என்பதால் மாப்பிளை சினிமா துறையை சேர்ந்தவரா இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.