”எங்களின் வலிமையை பட்டிதொட்டி தெரியும் சட்டசபையும் அறியும்” தூங்கநகரம் அஜித் ரசிகர்களால் மாநகரை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை..!!

அஜீத்தின் வலிமை விரைவில் ரீலிஸாக இருக்கும் நிலையில், மதுரை ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

”எங்களின் வலிமையை பட்டிதொட்டி தெரியும் சட்டசபையும் அறியும்” தூங்கநகரம் அஜித் ரசிகர்களால் மாநகரை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை..!!

வலிமை பட அப்டேட்-ற்காக காத்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான வலிமை பட ட்ரைலர் அவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது . போனி கபூரின் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ஹட்ச்.வினோத் இயக்கியிருக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று கார்த்திக்கேயாவும், முக்கிய வேடத்தில் ஹுமா குரோஷியும் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலரில் அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், மதுரை தூங்கநகரம் அஜித் ரசிகர்களால் மாநகரை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செயலகம் பின்னணியில் முதல்வர் நாற்காலியில் அஜித் அமர்ந்திருப்பது போன்ற படத்துடன், ”எங்களின் வலிமையை பட்டிதொட்டி தெரியும் சட்டசபையும் அறியும்” என்று எழுதப்பட்டுள்ள வாசகம் இடம் பிடித்துள்ள தல என்றும் கூப்பிடாதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.