நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில்  நடிகரின் கையை கடித்த நடிகை ஹேமா...

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நடிகரின் கையை, நடிகை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில்  நடிகரின் கையை கடித்த நடிகை ஹேமா...

தெலுங்கு நடிகர் சங்கமான மாவின் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மன்சு தலைமையில் இரண்டு அணிகள் பலப்பரீச்சை நடத்தியது. இரு அணிகளும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு சரமாரியாக விமர்சித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று இரவே அறிவிக்கப்பட்டன. இதில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மன்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

 இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் அணியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வாக்குப் பதிவின் போது பிரசாரம் செய்தார். அதை மனோன் மன்சு அணியை சேர்ந்த நடிகர் சிவபாலாஜி எதிர்த்தார்.  அப்போது பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜி கையை திடீரென கடித்தார். இதை எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை ஹேமா, நான் சிவ பாலாஜியை கடித்தது உண்மை தான். காரணமில்லாமல் யாரும் எதையும் செய்யமாட்டார்கள். ஏன் கடித்தேன் என்பதை நடிகர் சிவபாலஜியை கேளுங்கள் என கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.