இவர் தான் என்னுடைய "பெஸ்ட் ஃபிரண்ட்... நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா 

மலையாளத்தில் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா தமிழில் நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தான் என்னுடைய "பெஸ்ட் ஃபிரண்ட்... நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா 

நேரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியாகி மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூலை அள்ளிய திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று.

நேரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வர ராஜாராணி, வாயை மூடி பேசவும்,நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டார்.

இப்பொழுது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள நஸ்ரியா அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வர, நடிகர் நானியின் நடிப்பில் விவேக் அத்ரியா இயக்கத்தில் அன்டே சுந்தரானிக்கி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது.

இப்பொழுது பகத் பாசிலுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ள க்யூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் பகத் பாசில் தான் என்னுடைய "பெஸ்ட் ஃபிரண்ட்" என அறிமுகப் படுத்தியதோடு நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த க்யூட் கப்புளின் ஃபிரண்ட்ஷிப் டே புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.