உலகளவில் யூடியூபில் நம்பர் 1 பாடலாகி அரபிக் குத்து சாதனை:

உலகளவில் யூடியூபில் நம்பர் 1 பாடலாகி அரபிக் குத்து சாதனை:
 உலக அளவில், யூடியூபின் பாடல்கள் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தது அரபிக் குத்து பாடல். பான் வர்ள்டு பாடல் என உருவாக்கப்பட்ட இந்த பாடல், முன்பே பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 13ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படமானது, பல எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கப்பட்டது. ஆனால், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களையேப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படம் தான் பீஸ்ட்.
 
விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தின் பாடல்கள் படு வைரலாகின. இந்த படத்தின் பாடல்கள், வெளியான ஒரு வாரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது. மேலும், இந்த பாடல்கள் ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது என்றே சொல்லலாம்.
 
பான் வர்ள்டு படம் என மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகளைக் கொடுத்த இந்த படம், கதையளவில் விமர்சணங்களை நல்ல படியாக பெறவில்லை என்றாலும், இடந்த படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிக்கப்பட்டு தான் வருகிறது. அனிருத் இசையமைக்க, சிவ கார்த்திகேயன் வரிகளில் உருவான இந்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், தற்போது உலக அளவில், பாடல்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அரபிக் குத்து பாடல், அனிருத் மற்றும் ஜொனிட்டா காந்தியின் குரலில் உருவாகியது. அதன் வீடியோ பாடல், கடந்த மே மாதம் 9ம் தேதி வெளியாகிய நிலையில், கிட்டத்தட்ட 150 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி 1.5 மில்லியன் லைக்குகளையும் பெற்று, டாப் பாடல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
ஏற்கனவே, பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் வெளியான 24 மணி நேரத்திலேயே 29 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்த் அனிலையி, இந்த சாதனை ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.