கலைகட்டிய ஹாப்பி ஸ்ட்ரீட்...!

 கலைகட்டிய ஹாப்பி ஸ்ட்ரீட்...!

சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ஹாப்பி ஸ்ட்ரீட்  நிகழ்ச்சி கலை கட்டியது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வயதை மறைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருநகர மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றுடன்  இணைந்து சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் நான்காவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில்  செஸ், பரமபதம், கராத்தே, கோலமிடுதல், பாட்டு போட்டி, நடனம், நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. 

மேலும் தப்பாட்டம், இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது, இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்று இருந்தது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியாக வரவேற்கத்தக்கது. இதே போன்ற பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பொதுமக்கள் சார்பில் தெரிவித்து வருகின்றனர். இங்கு உள்ள பொழுதுபோக்கு அம்சங்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர். காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.