தமிழில் வரும் பினராயி விஜயன் வாழ்க்கை வரலாறு..! மம்முட்டியின் ஒன் திரைப்பட டிரைலர் வெளியீடு..!

மம்முட்டியின் ஒன் படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு

தமிழில் வரும் பினராயி விஜயன் வாழ்க்கை வரலாறு..! மம்முட்டியின் ஒன் திரைப்பட டிரைலர் வெளியீடு..!

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான யாத்ரா சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்ட்டது. 

இதில் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்து அசத்தியிருந்தார். ஸ்ரீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். நெட்ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படமும் கேரள ரசிகர்களிடம் பெறும் வரவேர்பை பெற்றது. இதனையடுத்து படம் தமிழிலிலும் வெளியாகவுள்ளது. 

முதற்கட்டமாக படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளப் படத்திற்கு டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ள போதிலும், டிரைலர் தமிழ் ரசிகர்களாலும் விரும்பம்பட்டுள்ளது.