நயன்தாராவை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்

நயன்தாராவை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்த விஜய் சேதுபதி -நயன்தாரா -விக்னேஷ் சிவன் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கூடுதல் சிறப்பாக படத்தில் சமந்தாவும் உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாகி உள்ளது.

ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் எழுத்தில் நான் பிழை... நீ மழலை என்ற மெலடி பாடல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் 2.4 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. லிரிக் வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் இத்தகைய வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் கவிதைத்தனமாக உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது