ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடிய நிவேதா தாமஸ்! வைரலாகும் வீடியோ!!

ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடிய நிவேதா தாமஸின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடிய நிவேதா தாமஸ்! வைரலாகும் வீடியோ!!

கமல்ஹாசனுடன்  ’பாபநாசம்’  ரஜினிகாந்துடன் ’தர்பார்’ ஆகிய படங்களில் அவர்களின் மகளாக நடித்துள்ள நடிகை நிவேதா தாமஸ் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவே இவருக்கு இணையதள ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்  ஏஆர் ரஹ்மான் பாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக கம்போஸ் செய்த இந்திப் பாடல் ஒன்றை  நிவேதா தாமஸ் இசைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி  வருகிறது.