பெட்ரோல் விலை 63ஆக இருக்கும் போது எதிர்த்தீர்கள்,.இப்போது 100 ரூபாய்,. இப்போது எங்கே சென்றீர்கள்? பாலிவுட் நடிகர்களை விளாசிய காங்கிரஸ் கட்சி.!  

பெட்ரோல் விலை 63ஆக இருக்கும் போது எதிர்த்தீர்கள்,.இப்போது 100 ரூபாய்,. இப்போது எங்கே சென்றீர்கள்? பாலிவுட் நடிகர்களை விளாசிய காங்கிரஸ் கட்சி.!  

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது கேள்வியெழுப்பிய நீங்கள் இப்போது எங்கே சென்றிர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

ஒன்றிய அரசை காங்கிரஸ் ஆட்சிசெய்த போது பெட்ரோல் விலையை உயர்த்தியது. அப்போது இதை கண்டித்து பாஜகவினர் நாடு முழுவதும் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளும் பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்கள் கூறினர். 

அதன்பின் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் பெட்ரோல் விலை குறையவில்லை, மாறாக அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை தற்போது 100ஐ தொட்டுள்ளது. மும்பையில் தற்போது பெட்ரோல் விலை 100.72 ரூபாயாகவும், டீசல் விலை 92. 69 ரூபாயாகவும் இருக்கிறது. 

காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் பல மடங்கு பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில் அப்போது காங்கிரஸை விமர்சித்த  பிரபல பாலிவுட் நடிகர்கள் இப்போது எங்கே சென்றிர்கள் என மஹாராஸ்டிர காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப், நடிகர் அமிதாப்பச்சன், அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம்கெர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் எரிபொருள் விலை உயர்வு வானை முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருந்த போதும் அது குறித்து கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். 

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் "காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த அளவு எரிபொருள் விலை அதிகரித்ததற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டனர். ஆனால் இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. அப்படி இருந்தும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருப்பது ஏன்? 2012ம் ஆண்டு பெட்ரோல் விலை 63 ரூபாயிக்கு சென்ற போது அமிதாப்பச்சன் அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால் இப்போது ஏன் ட்விட்டரில் பதிவிடவில்லை என்று கடிதத்தில் கேள்வி கேட்டுள்ளேன்"  எனக் கூறியுள்ளார்.