பரிதாபங்கள்,நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15  யூடியூப் சேனல்களை ஹேக் செய்த ஹேக்கர்கள்:  அதிர்ச்சியில் உறைந்த யூடிப்பர்கள்..

யூடியூப் தளத்தில் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் மர்ம நபர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபங்கள்,நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15  யூடியூப் சேனல்களை ஹேக் செய்த ஹேக்கர்கள்:  அதிர்ச்சியில் உறைந்த யூடிப்பர்கள்..

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூடியூப் யூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. அதேபோல் சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற சேனல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் தமிழ்நாட்டில் அதிக சப்கிரைப்பர்ஸ் இருக்கும் யூடியூப் சேனல்கள் ஆகும். ஒரே இரவில் இந்த சேனல்கள் மொத்தமாக ஹேக் ஆகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியான விவரங்களின் படி 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி கனி ஆகியோரின் குக்கிங் சேனல் உட்பட சில சமையல் தொடர்பான சேனல்களும் முடக்கப்பட்டு இருக்கிறது. இரவோடு இரவாக மர்ம நபர்களால் இந்த சேனல்கள் முடக்கப்பட்டது பல்வேறு சந்தேங்களை எழுப்பி உள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனல்களில் எல்லாம் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே கிரிப்டோகரன்சி தொடர்பான குழு ஒன்று ஹேக்கிங்கை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கிரிப்டோகரன்சிக்கு விளம்பரம் தரும் வகையில் இந்த சேனல்களை ஹேக் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. முடக்கப்பட்ட சேனல்கள் அனைத்திலும் முகப்பு பக்கத்தில் கிரிப்டோகரன்சியின் விளம்பரங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.