நடிகை வனிதா ஷேர் செய்த வீடியோ... இதெல்லாமா வச்சு காசு சம்பாதிப்பீங்க.. விளாசும் நெட்டிசன்கள்

நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ள வீடியோவை கண்ட நெட்டிசன்கள், அவரை வச்சு விளாசியுள்ளனர்.

நடிகை வனிதா ஷேர் செய்த வீடியோ... இதெல்லாமா வச்சு காசு சம்பாதிப்பீங்க..   விளாசும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சுரேஷ் சக்கரவர்த்தியும் வனிதாவும் ஜோடியாக நடனமாடி வந்தனர். கடந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா அறிவித்தார். 

மேலும் சேனலோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், துன்புறுத்தல்களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வனிதா தெரிவித்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனோடு பிரச்சனையா என கேட்டு வந்தனர். பின்னர் ரம்யா கிருஷ்ணன் வனிதாவின் நடனத்தை பார்த்து பத்துக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே வழங்கியதாகவும் அதுவே வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற காரணம் என்றும் கூறப்பட்டது.

வனிதா காளி வேடமிட்டு நடனமாடிய போட்டோக்கள் அண்மையில் வெளியானது. அந்த கெட்டப்பில் வனிதா நடனம் ஆடும் போதுதான் இந்த பிரச்சனை நிகழ்ந்ததாக தகவல் வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டீங்க..ஆயிரம் விமர்சனங்கள் வச்சுட்டீங்க.. அப்புறம் எதுக்கு அதை வச்சு காசு பார்க்கனும் என விளாசி வருகின்றனர்.