நம்ம மாரியம்மாவா இது..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

கவர்ச்சி போட்டோ ஷூட்டால் இளைஞர்களை கிரங்கடித்த துஷாரா விஜயன்..!

நம்ம மாரியம்மாவா இது..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த மாரியம்மாவா இது? என்ற சந்தேகத்தோடு பார்க்கத் தோன்றுகிறது அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

ப.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் ஓடிடியில் வெளியான திரைப்படம் ’சார்பட்டா பரம்பரை’. வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோவையும் தாண்டி இந்தப் படத்தில் நடித்திருந்த 
ஒரு ஒரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் ஆணி அடித்தாற் போல் பதிந்தது. படம் வெளியான சில காலம் இளைஞர்களும், சிறுவர்களும் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே மாறி, பல வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டனர். 

அந்தவகையில் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் துஷாரா விஜயன். நிறைய குறும்படங்களில் நடித்திருந்தவர் இப்படம் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தனது அசால்ட்டான நடிப்பில் அப்படியே கிராமத்து பெண்ணாகவும், ஆர்யாவை மிரட்டும் போதெல்லாம் உரிமையுள்ள ஒரு மனைவியாகவும் கேரக்டரில் வாழ்ந்திருந்தார் துஷாரா. இந்த நிலையில், தற்போது துஷாரா நடத்தியுள்ள ஒரு போட்டோ ஷூட் ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. வெள்ளை நிறத்தில் ஒரு சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, படுக்கையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள துஷாராவை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.