சிம்புவின் வெந்து தணிந்தது காடு.. ஃபோட்டோவுடன் வெளியான அப்டேட்..!!

சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு.. ஃபோட்டோவுடன் வெளியான அப்டேட்..!!

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இரு படங்களை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக முடிவானது. முதல் படமாக நதிகளிலே நீராடும் சூரியன், வெந்து தணிந்தது காடு போன்ற புதிய படங்களை தொடங்கினர். வெந்து தணிந்தது காடு படத்தில் உடல் மெலிந்து, அழுக்கு உடையில் சிம்பு இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் அமோக வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாவது லுக் என, தொழிலாளர்களுடன் குறுகலான அறையில் சிம்பு படுத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. வழக்கமான என்டர்டெயின்மெண்ட்களை தவிர்த்து, அழுத்தமான கதையைக் கொண்ட படம் வெந்து தணிந்தது காடு என்ற எண்ணத்தை இவ்விரு புகைப்படங்களும் பிரதிபலித்தன.

இந்நிலையில், வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டருடன் சிம்புவும், படக்குழுவும் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் உள்ளன. சிம்பு பிரமாதமாக சண்டைக் காட்சியில் நடித்து ஸ்டண்ட் மாஸ்டரின் பாராட்டை பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியானது.