கோடை வெயில் கொளுத்துது.! கும்மாளம் போட்ட கோவில் யானை...! வைரலாகும் வீடியோ..!

கோடை வெயில் கொளுத்துது.!  கும்மாளம் போட்ட  கோவில் யானை...!  வைரலாகும் வீடியோ..!


முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடானது,  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் 12 மாதமும் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று முடிந்தது. 

பங்குனித் திருவிழாவில் சிகர நெகிழ்ச்சியான திருக்கல்யாண வைபவம்., திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக பக்தர்களின் "அரோகரா"  கோஷம்  முழங்க நடைபெற்று  முடிந்தது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் கோவில் யானை வெளியே கொண்டுவரப்பட்டது.
 
இதையும் படிக்க:..வட மாநில தொழிலாளர்கள் வதந்தி... ஜாமீன் மனு விசாரணை!!


இந்த நிலையில் கோடை காலம் என்பதால் கோவில் தெய்வானை யானையை புத்துணர்ச்சி செய்யும் வகையில் அதற்காக குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. திருக்கோவில் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் கோவில் யானை தெய்வானை பாகனுடன் சென்ற நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டை தணிக்கும் வகையில் ஆனந்தமாக உருண்டு புரண்டு தண்ணீரில் விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது மனிதர்களாகிய நாமே நீச்சல் குளத்தை தேடும் போது யானை குதித்து விளையாடக்கூடிய காட்சி காண்பவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 
 இதையும் படிக்க:... அரியலூரில் துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்...!

ஏற்கனவே சென்ற மாதம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் யானை குளித்த  காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் கோவில் 'தெய்வானை' யானை குளிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.