டிரண்டாகும் தல தளபதியின் புகைப்படம்.. வெறித்தனம்! எடிட்டிங்கில் மாஸ் காட்டும் ரசிகர்கள்

அஜித்தின் புகைப்படத்தை எடுத்து ரசிகர்கள் விஜய்யுடன் வைத்து மிரட்டலான போஸ்டர் ஒன்றை எடிட் செய்துள்ளனர்.

டிரண்டாகும் தல தளபதியின் புகைப்படம்.. வெறித்தனம்! எடிட்டிங்கில் மாஸ் காட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பின்னர் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது விஜய், அஜித்திற்கு தான். இவர்களின் படங்கள் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் சோ, திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும். 

என்னதான் அஜித், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், இவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் சண்டை தீர்க்கமுடியாத பிரச்சனையாக உள்ளது. அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்களும், விஜய்யை கலாய்த்து அஜித் ரசிகர்களும் மீம்களை மாறி மாறி ஷேர் செய்து சண்டையிட்டு வருகிறார்கள்.

தற்போது நடிகர் அஜித் வலிமை படத்திலும், விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்கள். இதில், அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாறி பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்பாடலிலுள்ள அஜித்தின் புகைப்படத்தை எடுத்து ரசிகர்கள் விஜய்யுடன் வைத்து மிரட்டலான போஸ்டர் ஒன்றை எடிட் செய்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.