“கருத்து சுதந்திரம் எங்கே?, சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? நடிகர் விஷால் ட்வீட்!

சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன் நடிகர் விஷால் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.

“கருத்து சுதந்திரம் எங்கே?, சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? நடிகர் விஷால் ட்வீட்!

 கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது.

தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மசோதாவிற்கு நடிகர் கமல் ஹாசன், நடிகர் கார்த்தி, அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ”கருத்து சுதந்திரம் எங்கே?, சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை? தணிக்கை வாரியம் ஏன் உள்ளது? முதலில் ஜிஎஸ்டி, பின்னர் பைரசிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஒளிப்பதிவு திருத்த மசோதா சட்டத்தை கொண்டு வருவது நியாயமற்றது ” என்று குறிப்பிட்டுள்ளார்