கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி

நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி

நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டில் கவனக்குறைவாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 328 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனத்தால் மோதி விட்டு தப்பிய சம்பவங்கள், 41 ஆயிரத்து 196 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ரெயில் விபத்துகளால் 52 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், மருத்துவ அஜாக்கிரதையால் 133 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் கவனக்குறைவால் 51 பேரும் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதர கவனக்குறைவு நிகழ்வுகளால் 6 ஆயிரத்து 367 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.