12.8 % மக்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை உள்ளது - அமைச்சர் பகீர் தகவல்

கேரளாவில் 12.8 சதவிகித மக்கள் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

உலக மனநல தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமுதாய முன்னேற்றத்திற்கு மக்களின் உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் அவசியம் என குறிப்பிட்ட அவர், கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 12.8 சதவிகிதம் பேர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான சிகிச்சை முறைகள், சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பது மக்களுக்கு தெரிவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மன ஆரோக்கியத்தின் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.