குஜராத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 19 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் குஜ­ராத் துறை­மு­கத்­தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து ஈரான் துறை­மு­கம் வழி­யாக 2 கண்டெய்னர்களில் இந்­தப் போதைப்­பொ­ருள் குஜ­ராத் மாநில துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. கப்­ப­லின் 2 கண்டெய்னர்களுக்குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அந்த ஹெரா­யின் போதைப்­பொ­ருள் ஆந்­தி­ரா­வில் உள்ள நிறு­வ­னத்­திற்கு அனுப்­பப்­ப­டு­வதாக குறிப்­பி­டப்­பட்டிருந்­தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆப்கன் நாட்டி சேர்ந்த சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா­வில் ஒரே சம­யத்­தில் இந்த அளவு போதைப்­பொ­ருள் பிடி­பட்­ட­தில்லை என்றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.