முடிவெட்டிக் கொண்ட பெண்ணுக்கு 2 கோடி இழப்பீடு... எதற்காக தெரியுமா..?

தமிழக காவல்துறை நடத்தி வரும் "ஸ்டாமிங் ஆப்பரேஷன்" மூலம் இதுவரை 2 ஆயிரத்து 512 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முடிவெட்டிக் கொண்ட பெண்ணுக்கு 2 கோடி இழப்பீடு... எதற்காக தெரியுமா..?

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உள்ள சலூனுக்கு கடந்த 2018-ம் ஆண்டு பெண் மாடல் ஒருவர் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். ஆனால் சிகையலங்கார நிபுணர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடியை வெட்டியதாகவும், இதனால் தலைமுடி சார்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முன்னணி மாடலாக விரும்பிய அப்பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதை தொடர்ந்து தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதனை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் 3 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கியுள்ளது. சலூனின் கவனக்குறைவு காரணமாக, பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதோடு, துறை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளார். இவற்றை கருத்தில்கொண்டு 5 நட்சத்திர ஓட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.