அனைத்து மாநிலங்களிலும் 2.69 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2 கோடியே 69 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் 2.69 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2 கோடியே 69 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 51 கோடியே இரண்டு லட்சம்  தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன. கூடுதலாக 7 லட்சத்து 53 ஆயிரம் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48 கோடியே 93 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.