மாநிலங்களவைக்கு தேர்வான 24 பேர் பதவியேற்பு...

மாநிலங்களவைக்கு தேர்வான 24 பேர் பதவியேற்பு...

மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட 24 பேர் மாநிலங்களவைவில் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கெய்யா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவையில் காலியாக இருந்த 24 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தத்து. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.  கர்நாடகா மாநிலத்தில் இருந்து நிர்மலா சீதாராமனும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பியூஸ் கோயலும் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர். 


காங்கிரஸ் உறுப்பினர்கள்:

காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் தன்கா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். 

கர்நாடகாவில் இருந்து ரமேஷ், ராஜஸ்தானில் இருந்து வாஸ்னிக், மத்தியப் பிரதேசத்தில் இருந்து தன்கா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பாஜக உறுப்பினர்கள்:

பாஜக தலைவர்கள் சுரேந்திர நாகர், லட்சுமிகாந்த் பாஜ்பாய், உத்தரபிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுராம் நிஷாத், மகாராஷ்டிராவில் இருந்து தனஞ்சய் மது, ராஜஸ்தானில் இருந்து கன்ஷியாம் திவாரி ஆகியோரும்  பதவியேற்று உள்ளனர்.

ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சுஸ்மிதா பத்ரா உட்பட மூன்று தலைவர்களும் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

மாநிலங்களவையில் உள்ள 72 உறுப்பினர்கள் ஜூலை மாதத்திற்குள்  ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை நிலையான அமைப்பு ஆகும்.  இதை கலைக்கமுடியாது.  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர்.  இதன் உறுப்பினர்கள் நியமனம் மற்றும்  தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.