டெல்லியில் சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை - ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டம்!

டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை - ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டம்!

இந்திய சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஷின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள பழைய அமர் ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள மைதானத்தின் கீழ் 30 அடி உயர சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி சுபாஷ் சந்திரபோஷின் 30 உயர சிலையை செதுக்கவுள்ளார். இந்த சிலையை செய்வதற்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கருப்பு நிற ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.