கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்: மத்திய அரசு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்: மத்திய அரசு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த மத்திய அரசு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி வருங்காலங்களில் மரணிப்பவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

மேலும் இந்த நிதி மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இறப்புச் சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு  வழங்கப்படும்  என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 768 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க 2,200 கோடி ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.