”பிற்போக்குத்தனத்தை பின்பற்றும் எதிர்கட்சியினர்” - பிரதமர் குற்றச்சாட்டு

”பிற்போக்குத்தனத்தை பின்பற்றும் எதிர்கட்சியினர்” - பிரதமர் குற்றச்சாட்டு

போர் நினைவுச் சின்னங்கள் கூட அமைக்காத எதிர்கட்சிகள், நாடாளுமன்றத்தை எதிர்ப்பதாகவும், பிற்போக்குத்தனத்தை பின்பற்றுவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் 508 ரயில்நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் திருவள்ளூர், அரக்கோணம், தென்காசி, தஞ்சை, சேலம், திருப்பூர் உள்பட 18 ரயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க : "உண்மையைப் பேசிய பி.டி. ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்" - அண்ணாமலை

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய ஆற்றல் மற்றும் உத்வேகத்துடன் வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணித்து வருவதாக தெரிவித்தார். தானாக எந்த முன்னேற்றப் பணியையும் முன்னெடுக்காத எதிர்கட்சியினர், பிறரின் நற்பணிகளையும் மதிப்பதில்லை என விமர்சித்தார்.

தேசியப்போர் நினைவுக் கட்டிடம் கட்டியபோது, அதனை வெட்கமின்றி பகிரங்கமாக எதிர்கட்சியினர் எதிர்த்ததாகவும், இந்தியர்கள் பெருமைப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை எதிர்கட்சியின் ஒருவர் கூட பார்வையிடவில்லை எனவும் கூறினார். பிற்போக்குத்தனத்தை பின்பற்றுவதையே எதிர்கட்சிகள் பணியாகக் கொண்டுள்ளதாகவும் கடுமையாக சாடினார்.