உ.பி.யில் இன்று 61 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு.. மதியம்  3 மணி நிலவரம்?

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இன்று 5 வது கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், மதியம்  3 மணி நிலவரப்படி சுமார் 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

உ.பி.யில் இன்று 61 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு.. மதியம்  3 மணி நிலவரம்?

உத்தரப்பிரதேசத்தில் 5வது கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்களும் காலை முதல் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 685 பேர் போட்டியிடுகின்றனர். முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையானது மார்ச் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில்  மதியம் 3 மணி நிலவரப்படி சுமார் 50 சதவீதம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளதால், மக்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகள் முன்பு திரண்டுள்ளனர்.